கண்ணீரால் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை வென்ற பிக் பாஸ் குடும்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது, பிக் பாஸ் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தினைக் காட்டிலும் 3 வது பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்த முறை களமிறங்கிய போட்டியாளர்கள் வித்தியாசமான துறைகளைச் சார்ந்தவர்கள் என்பதே இதற்குக் காரணமாகும். பிற மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் எப்போதும் பங்கு பெறுவர், ஆனால் இம்முறை இலங்கை போன்று பிற நாட்டிலிருந்து பங்கு பெற்றது தனிச் சிறப்பு எனலாம். பிரச்சினைகளையே மொத்தமாக்க் கொண்ட பிக் பாஸ் குடும்பத்தில்,
 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது, பிக் பாஸ் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தினைக் காட்டிலும் 3 வது பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இந்த முறை களமிறங்கிய போட்டியாளர்கள் வித்தியாசமான துறைகளைச் சார்ந்தவர்கள் என்பதே இதற்குக் காரணமாகும். பிற மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் எப்போதும் பங்கு பெறுவர், ஆனால் இம்முறை இலங்கை போன்று பிற நாட்டிலிருந்து பங்கு பெற்றது தனிச் சிறப்பு எனலாம்.

கண்ணீரால் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை வென்ற பிக் பாஸ் குடும்பம்!

பிரச்சினைகளையே மொத்தமாக்க் கொண்ட பிக் பாஸ் குடும்பத்தில், முதன் முதலாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

ஒவ்வொருவர் வாழ்வில் நடந்த சம்பவமும் நெஞ்சை உலுக்கும்படியாக இருந்தது. மோகன் வைத்யா அவர்களின் மனைவி வாய் பேசாத காது கேளாத மனைவி இறந்த கதை, பிறவியிலேயே வாய் பேசாத மகன் பிறந்த கதை, சரவணனின் இரண்டாவது திருமணம், கவினின் குடும்பம் உறவினர்களால் ஒதுக்கப்படுதல், மதுமிதாவின் வறுமை மற்றும் தந்தை இல்லாத நிலை, ரேஷ்மாவின் திருமண வாழ்க்கை நிகழ்ந்த கொடூர சம்பவங்கள், மன்நிலை சரியில்லாத குழந்தை மற்றும் இறந்தே பிறந்த குழந்தை. லாஸ்லியா அக்காவின் தற்கொலை என அவரவர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த துன்பத்தினைப் பற்றிக் கூறி அழ வைத்தனர்.


கடந்தவாரம் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்களை உண்மையாகவே தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு இந்த வாரத்திற்கான லக்‌ஷூரி பட்ஜெட்டுக்கான 3200 மதிப்பெண்களையும்  பிக் பாஸ் வழங்கியுள்ளார். இதன் மூலம் தங்களுக்கு தேவையானவற்றை அந்த பட்ஜெட்டிற்குள் போட்டியாளர்கள் பெற்றுக்கொண்டனர். 


From around the web