ஹவுஸ்மேட்ஸ்களை அங்கப்பிரதட்சணம் செய்ய வைத்த பிக்பாஸ்: வேற டாஸ்க்கே கிடைக்கலையா?

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இறுதி நாள் நெருங்க நெருங்க டாஸ்குகளின் கடுமை அதிகமாகும் என்பதும் சில டாஸ்குகள் விடிய விடிய நடைபெறும் என்பதும் தெரிந்ததே

ஆனால் இந்த நான்காவது சீசனில் டாஸ்குகள் அனைத்தும் எல்கேஜி குழந்தைகளுக்கு கொடுப்பது போல் கொடுத்து வருவதாக நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஃபினாலே டாஸ்க்கின் 7-வது சுற்றின் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது 

task in biggboss

இதில் கோயில்களில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு உருண்டு பந்தை எடுக்க வேண்டும் என்ற காமெடியான டாஸ்க் கொடுக்கப்படுகிறது.  இந்த டாஸ்க்கின் கடைசி கட்டத்தில் பாலா மற்றும் கேபி ஆகிய இருவரும் வந்துள்ள நிலையில் இருவரில் யார் வெற்றி பெற்று 7 மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்ற முடிவை மூன்றாவது அம்பையர் கூறுவார் என பிக்பாஸ் அறிவித்துள்ளதுடன் வீடியோ முடிவடைகிறது 

இந்த டாஸ்க்கில் கேபி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இன்னும் கடுமையான கொடுக்க வேண்டும் என்றும் குழந்தைத்தனமான டாஸ்க்குகளை கொடுத்து போட்டியை சுவாரஸ்யம் இல்லாமல் செய்ய வேண்டாம் என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

From around the web