இன்று முதல் ஹவுஸ்மேட்ஸ்களை அழவைக்க முடிவு செய்த பிக்பாஸ்!

 

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் வைக்கும் ஒவ்வொரு டாஸ்கும் கடுமையாக இருந்து வருகிறது என்பதும் சண்டை சச்சரவுடன் தான் டாஸ்குகளை ஹவுஸ்மேட்ஸ் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஒரு சில டாஸ்குகள் மட்டும் நகைச்சுவையாக இருந்தாலும் பெரும்பாலும் பல டாஸ்குகள் சண்டைகள் தான் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று முதல் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்படுகிறது 

biggboss

அதாவது ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது அசையாமல் இருக்க வேண்டும் என்ற ப்ரிஸ் டாஸ்க். இந்த டாஸ்க் இன்று முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் உறவினர்கள் வரும்போது சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என்பதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் கண்ணீரை வர வைக்கும் காட்சிகள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் நுழையும்போது ஆனந்தம், ஆர்ப்பாட்டம் மற்றும் சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என்பதால் இந்த சீசனிலும் அதை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web