இறைவணக்கத்திற்கு பதில் மனித வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ்

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சற்றுமுன் தொடங்கியது. ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போது இறைவணக்கத்துடன் ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சி மனித வணக்கத்துடன் ஆரம்பமானது

ஆம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி அவர்களின் மனைவியுடன் பேசிய கமல்ஹாசன், அவரை பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தெரிய வைத்தார். பாலமுரளியின் மனைவி பேசியபோது, தாங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் தங்கள் அனைவருக்கும் தைரியம் கூறியதாகவும், எல்லோரையும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறிய அவர் பாதுகாப்புடன் இல்லாமல் பலியாகிவிட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.

அதேபோல் மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களிடம் பேசி பெருமைப்படுத்திய கமல் இன்றைய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web