மீரா மிதுன் வெளியேறியதால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி…!

பிக்பாஸ் சீசன் 3 நான்காவது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு பிரச்னை, சண்டை அல்லது வாக்குவாதம் என தொடர்ந்து நடப்பதால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு குவிந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் நாளே வந்த வனிதா விஜயகுமார் மற்றும் சில நாட்கள் கழித்து வந்த மீரா மிதூன் இருவரால் மட்டுமே நிகழ்ச்சி சுவாரஸ்யம் எடுக்க தொடங்கியது. அதுவும் நிகழ்ச்சி ஆரம்பித்த 3வது வாரத்திலேயே வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆனார். அதற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்தாலும்,
 

பிக்பாஸ் சீசன் 3 நான்காவது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு பிரச்னை, சண்டை அல்லது வாக்குவாதம் என தொடர்ந்து நடப்பதால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு குவிந்து வருகிறது. 

பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் நாளே வந்த வனிதா விஜயகுமார் மற்றும் சில நாட்கள் கழித்து வந்த மீரா மிதூன் இருவரால் மட்டுமே நிகழ்ச்சி சுவாரஸ்யம் எடுக்க தொடங்கியது. அதுவும் நிகழ்ச்சி ஆரம்பித்த 3வது வாரத்திலேயே வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆனார். 

மீரா மிதுன் வெளியேறியதால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி…!


அதற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்தாலும், அவர் இல்லாததால் நிகழ்ச்சி சலிப்பு அடிக்க தொடங்கியது. இதனால் பிக்பாஸின் டி.ஆர்.பி கடுமையாக சரியத் தொடங்கியது. வனிதாவின் வெளியேற்றத்திற்கு பிறகு மீராவால் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை எழத்தொடங்கியது. 

பெரும்பாலான பெண் போட்டியாளர்கள் அவரிடம் பேசுவதையே விட்டுவிட்டனர். இதனால் சரவணன், சாண்டி மற்றும் கவின் ஆகியோர் மட்டுமே மீராவிடம் நெருங்கிப் பழகினார்.


எதற்கெடுத்தாலும் கோபமாக கத்துவதும், மற்றவர்கள் முன்னிலையில் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக்கொள்வதையும் மீரா வழக்கமமாக கொண்டிருந்தார். குறிப்பாக, கடந்த வார லக்ஸுரி பட்ஜெ டாஸ்கின் போது சேரன் மீது வீண் பழி சுமத்தி பார்வையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்தார். 

ஆனால் இந்த முறை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அவர் முடிவு செய்துவிட்டார். அதன்படி, மீரா மீதான ரசிகர்களின் அதிருப்தியையும், நிகழ்ச்சியில் அவருடைய செயல்களை கருத்தில் கொண்டு மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். 


From around the web