கடவுள் சேவைக்கு சென்ற நடிகை திடீரென செய்து கொண்ட திருமணம்!

 

கடவுளின் ஆணையால் பொதுமக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் அதனால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் நடிகை சனாகான் அறிவித்தார். ஆனால் தற்போது அவர் திடீரென திருமணம் செய்து கொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிம்பு நடித்த சிலம்பாட்டம், விஷால் நடித்த அயோக்யா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சனாகான். இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் கடவுளின் ஆணைக்கிணங்க பொதுமக்களுக்கு சேவை சேவை செய்யப் போவதாகவும் அதனால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் இனிமேல் தன்னிடம் கடவுள் சம்பந்தப்பட்ட கேள்வியை மட்டுமே பத்திரிக்கையாளர்கள் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் திடீரென சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை சனாகான் திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது கடவுளின் ஆணைக்கிணங்க சேவை செய்யப் போவதாக கூறிய நடிகை திடீரென திருமணம் செய்துகொண்டது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


 

From around the web