அது என்னுடைய அறிக்கை அல்ல: ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினிகாந்த்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடபோவதில்லை என்றும், கொரோனா பரவும் வாய்ப்பு அவருக்கு அதிகம் இருப்பதால் அரசியல் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டதாகவும் அவரே எழுதியதாக கூறப்பட்ட ஒரு கடிதம் கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது

இந்த நிலையில் இந்த வதந்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


’என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்

ரஜினியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது


 

From around the web