வனிதாவை போல நடந்து கொண்ட தர்ஷன்..!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முதல் வாரத்தை தொடர்ந்து 2ஆவது வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை, சச்சரவு அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மீரா மிதுனை கொஞ்ச நாள் வெச்சு செஞ்ச வனிதா போர் அடித்துவிட்டதால் மதுமிதா மீது பாய்ந்தார். அதுவும் போரடித்துப் போக சேரனைப் பிடித்துள்ளார். படுக்கை அறையை சுத்தம் செய்யவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனை சேரன் கேப்டன் மோகன் வைத்யாவிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய
 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முதல் வாரத்தை தொடர்ந்து 2ஆவது வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை, சச்சரவு அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

மீரா மிதுனை கொஞ்ச  நாள் வெச்சு செஞ்ச வனிதா போர் அடித்துவிட்டதால் மதுமிதா மீது பாய்ந்தார். அதுவும் போரடித்துப் போக சேரனைப் பிடித்துள்ளார். படுக்கை அறையை சுத்தம் செய்யவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனை சேரன் கேப்டன் மோகன் வைத்யாவிடம் தெரிவித்துள்ளார். 

வனிதாவை போல நடந்து கொண்ட தர்ஷன்..!!

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு, செய்தியை தொகுத்து வழங்குவது எப்படி? என்று செய்து காண்பித்தார். இதனை முகென் ராவ், சேரன், சாண்டி, ஷெரின் ஆகியோர் சரியாக செய்துள்ளனர்.

அதனை அடுத்து, அவ்வை சண்முகி கெட்டப் ஆண் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து வீட்டில் பெண் போட்டியாளர்கள் யாரெல்லாம் எப்படி நடந்து கொண்டார்கள், எப்படியெல்லாம் சண்டை போட்டார்கள் என்பதை சரியாக நடித்துக் காண்பிக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார்.

இதில், கவின், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா, முகென் ராவ், சாண்டி ஆகியோர் பெண்கள் போன்று வேடமணிந்தனர். சேரன் மட்டும் சரவணனாக நடிக்க, கவின் – ஷெரின் வேடத்திலும், முகென் ராவ் – அபிராமி வேடத்திலும், மோகன் வைத்யா – மதுமிதா வேடத்திலும், சாண்டி – மீரா மிதுன் வேடத்திலும், தர்ஷன் – வனிதா வேடத்திலும் அவர்களைப் போன்று நடித்து காண்பித்தனர். 

கவின், சாண்டி, தர்ஷன் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்துகாட்டி, அனைவரையும் சிரிக்க வைத்தனர். அதில் குறிப்பாக தர்ஷன் வனிதாவைப் போல் நடித்துக் காட்டி அசத்தியதுடன், அதற்காக முதல் பரிசையும் வென்றார்.

From around the web