போலி பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்த தனுஷ்-பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

இயக்குனர் கஸ்தூரி ராஜா, ராஜ்கிரண் நடித்த ராசாவின் மனசிலே தொட்டு பல்வேறு தமிழ்ப்படங்களை இயக்கியுள்ளார். கிராமத்து படங்களாக இயக்கிய கஸ்தூரி ராஜா மாடர்ன் கெட் அப்பில் தன் மகன் தனுஷை வைத்து இயக்கிய படம் துள்ளுவதோ இளமை. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படமாகவும் கஸ்தூரி ராஜாவின் கிராமத்து இமேஜை மாற்றும் வகையிலும் அமைந்தது. தனுசுக்கும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் கிடைத்தது. பின்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை மணமுடித்து செட்டிலானார். இந்நிலையில் மேலூரை
 
போலி பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்த தனுஷ்-பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

இயக்குனர் கஸ்தூரி ராஜா, ராஜ்கிரண் நடித்த ராசாவின் மனசிலே தொட்டு பல்வேறு தமிழ்ப்படங்களை இயக்கியுள்ளார். கிராமத்து படங்களாக இயக்கிய கஸ்தூரி ராஜா மாடர்ன் கெட் அப்பில் தன் மகன் தனுஷை வைத்து இயக்கிய படம் துள்ளுவதோ இளமை. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படமாகவும் கஸ்தூரி ராஜாவின் கிராமத்து இமேஜை மாற்றும் வகையிலும் அமைந்தது.

தனுசுக்கும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் கிடைத்தது. பின்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை மணமுடித்து செட்டிலானார்.

இந்நிலையில் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷை தனது மகன் என்றும், தனக்கு மாதந்தோறும் அவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோரியும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.  இந்த வழக்கில், நடிகர் தனுஷ் தனது பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கதிரேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல எனக்கூறி கடந்த மார்ச் 23ம் தேதி தள்ளுபடியானது.

இதனிடையே, கதிரேசன் ஐகோர்ட் கிளையில் மீண்டும் தாக்கல் செய்த மனுவில், மதுரை கோ.புதூர் போலீஸ் மற்றும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் மீது குற்றவியல் சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறு கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது கீழமை கோர்ட்டில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூற கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் போலி சான்றிதல் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பாக புதூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றத்தின் இந்த கருத்தை செயல்படுத்தாமல் புதூர் போலீஸ் அதிகாரி கிடப்பில் போட்டதாகவும், கண்டுகொள்ளமல் விட்டதாகவும் கதிரேசன் மீண்டும் முறையிட இன்று நடந்த விசாரணையில் நடிகர் தனுஷுசுக்கும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி ஜேஎம் 6 நீதிபதி மாஜிஸ்திரெட் சாமுண்டீஸ்வரி  உத்தரவிட்டுள்ளார். பிப்.13ம் தேதி, நடிகர் தனுஷும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரும் பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

From around the web