கொரோனாவுக்கு நன்றி: தனுஷ் பட வாய்ப்பு குறித்து ‘மாஸ்டர்’ மாளவிகா

 
கொரோனாவுக்கு நன்றி: தனுஷ் பட வாய்ப்பு குறித்து ‘மாஸ்டர்’ மாளவிகா

தனுசுடன் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு கொரோனா தான் காரணம் என்று நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட் ஆக்சன் படம் ஒன்றிலும், வெப்தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது 

malavika

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகியதாகவும் ஆனால் அப்போது தன்னிடம் கால்ஷீட் இல்லை என்றும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது தேதிகள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட தனுஷ் படக்குழுவினர் தன்னை அணுகிய போது தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறினார் 

எனவே தனுசுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் என்றும் அதற்காக அவருக்கு நன்றி என்றும் மாளவிகா மோகனன் தெரிவித்துக்கொண்டார் 

From around the web