தற்போதைய சூழ்நிலையில் தங்க தமிழ் செல்வனுக்கு சினிமா நல்லது

தங்க தமிழ் செல்வன் உண்மையில் சினிமாவில் நடிக்கலாம். சினிமாவில் நடித்தால் ஓரளவு ஒரு ரவுண்ட் வருவார் என்பது உறுதி. காமெடிக்காக இது எழுதப்பட்டதல்ல. உண்மையாக கூறவேண்டுமென்றால் சினிமாவில் வில்லனாகவோ அல்லது தலைமைத்துவமான குணச்சித்திர நடிகராகவோ நடிக்க கூடிய எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. நடிப்பதற்கு எந்த டெஸ்டும் எடுக்க தேவையில்லை. நம்ம பக்கத்து வீட்டு சித்தப்பா, பெரியப்பா ,அண்ணன் ரேஞ்ச்ல இயல்பான மதுரை பாஷையில் பேசுவது அவரின் பெரிய ப்ளஸ். அவர் மீது தவறாகவே சில விசயங்கள்
 

தங்க தமிழ் செல்வன் உண்மையில் சினிமாவில் நடிக்கலாம். சினிமாவில் நடித்தால் ஓரளவு ஒரு ரவுண்ட் வருவார் என்பது உறுதி. காமெடிக்காக இது எழுதப்பட்டதல்ல. உண்மையாக கூறவேண்டுமென்றால் சினிமாவில் வில்லனாகவோ அல்லது தலைமைத்துவமான குணச்சித்திர நடிகராகவோ நடிக்க கூடிய எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. நடிப்பதற்கு எந்த டெஸ்டும் எடுக்க தேவையில்லை.

தற்போதைய சூழ்நிலையில் தங்க தமிழ் செல்வனுக்கு சினிமா நல்லது

நம்ம பக்கத்து வீட்டு சித்தப்பா, பெரியப்பா ,அண்ணன் ரேஞ்ச்ல இயல்பான மதுரை பாஷையில் பேசுவது அவரின் பெரிய ப்ளஸ்.

அவர் மீது தவறாகவே சில விசயங்கள் இருந்தாலும் சொல்ல வரும் கருத்தை நக்கலாக நறுக்கென்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் சொல்வதில் தங்க தமிழ் செல்வன் வல்லவர்.

உண்மையில் அதிமுக பக்கம் போக விருப்பம் இல்ல, அமமுக பக்கம் போக முடியாது, திமுக பக்கம் போகவும் மாட்டார்.

உண்மையில் சினிமாவுக்கேத்த இயல்பான கிராமத்து வில்லன் கேரக்டர் இவருக்கு ஒத்து வரும் . பேச்சு இயல்பாக இருப்பதும் உடல் மொழி இயல்பாக இருப்பதும், தெக்கத்தி பேச்சு அப்படியே அச்சு அசலாக இருப்பதும். இது போலத்தான் தெக்கத்திக்காரர்களான மதுரைக்காரர்கள் பேசுவார்கள் என பொதுவாக சொன்னாலும் இவர் அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் இவரை வைத்து வில்லனோ அல்லது கிராமத்து பெரிய மனிதரோ வீரம் வாய்ந்த முக்கியத்துவமான ரோல் இவருக்கு கொடுத்தால் கண்டிப்பாக சினிமாவில் கலக்குவார் என்பது உறுதி.

From around the web