திரைப்படம் வெளியாகும் நேரத்தில் மட்டும் அரசியல்: தமிமுன் அன்சாரி காட்டம்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர்களின் மறைவுக்கு பின்னர் முதல்வர் கனவை நோக்கி செல்லும் திரையுலகினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே அரசியலில் உள்ள தலைவர்கள் தங்களுடைய முதல்வர் கனவுக்கு ஆபத்து என்பதை அறிந்து திரையுலகினர்களின் அரசியல் வருகையை எதிர்த்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதித்துவிட்ட நிலையில் விஜய், விஷால் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து கூறிய தமிமுன்
 
திரைப்படம் வெளியாகும் நேரத்தில் மட்டும் அரசியல்:  தமிமுன் அன்சாரி காட்டம்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர்களின் மறைவுக்கு பின்னர் முதல்வர் கனவை நோக்கி செல்லும் திரையுலகினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே அரசியலில் உள்ள தலைவர்கள் தங்களுடைய முதல்வர் கனவுக்கு ஆபத்து என்பதை அறிந்து திரையுலகினர்களின் அரசியல் வருகையை எதிர்த்து வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதித்துவிட்ட நிலையில் விஜய், விஷால் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து கூறிய  தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, ‘பொதுமக்களின் போராட்டகளங்களுக்கு வராத நடிகர்கள் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் மட்டும் அரசியல் குறித்து பேசி வருகின்றனர்’ என்று காட்டமாக கூறியுள்ளார்.

From around the web