விஜய் ரசிகர்களுக்கு பிடித்த வில்லன்... தளபதி 65 இணைகிறார்
விஜய்க்கு வில்லனாகும் வாய்ப்பு நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
Thu, 18 Feb 2021

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்து தினமும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரப்பப்பட்டுள்ளது.
இவர் தளபதி விஜய்க்கு வில்லனாக இதற்கு முன் துப்பாக்கி படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.