தளபதி 65 படத்தின் ஹீரோயின் இவர் தானாம்... வெளியான சர்ப்ரைஸ்

சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, ஒரு மரண மாஸ் வீடியோவுடன் வந்தது.
 

தளபதி ரசிகர் என்றால் டிசம்பர் 2020 ஐ மறக்க முடியாது, ஆம் அன்று தான்  தளபதி விஜய் முதல் முறையாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

கடந்த மாதம் DOP மனோஜ் பரமஹம்சா தான் வரவிருக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். மேலும் ஒரு ரகசியத்தையும் வெளிப்படுத்தினார் - ஆம், தளபதி 65 ஒரு பான்-இந்தியன் படமாக இருக்கும் என்று கூறினார். இதனையடுத்து விஜய்யின் லுக் டெஸ்ட் சன் ஸ்டுடியோவில் பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது. 

மேலும் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று பேச்சு அடிபட்டு வந்தது எனினும் அதிகார்வப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போது மிக முக்கியமான ஒரு அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளனர். 

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தில் அவருக்கு ஜோடியாக புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே  நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக இணையும் இந்த் காம்போ நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


 

From around the web