விஜய் படத்திற்கு டைட்டிலை தர முடியாது என்று கூறிய தாணு: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை அறிவிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த அறிவிப்பில் டைட்டில் அறிவிக்கப்பட மாட்டாது என்றும் இந்த படம் குறித்த ஒரு சின்ன வீடியோ கிளிப் மட்டுமே வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்திற்கு ’துப்பாக்கி 2’ என்று டைட்டில் வைக்க ஏஆர்
 

விஜய் படத்திற்கு டைட்டிலை தர முடியாது என்று கூறிய தாணு: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை அறிவிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த அறிவிப்பில் டைட்டில் அறிவிக்கப்பட மாட்டாது என்றும் இந்த படம் குறித்த ஒரு சின்ன வீடியோ கிளிப் மட்டுமே வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் இந்த படத்திற்கு ’துப்பாக்கி 2’ என்று டைட்டில் வைக்க ஏஆர் முருகதாஸ் விருப்பப்பட்டதாகவும், ஆனால் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்த டைட்டிலை கொடுக்க மறுத்து விட்டதாகவும் எனவே டைட்டில் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது

இந்த படம் சென்னை பின்னணியில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படம் என்றும், அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் வழக்கம்போல் ஏஆர் முருகதாஸ் அவர்களின் அரசியல் நைய்யாண்டி காட்சிகளும் உண்டு என்றும் கூறப்படுகிறது. நாளை தளபதி விஜய்யின் திரைப்பட அறிவிப்பு வர உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

From around the web