இன்னும் 15 நாட்களில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்: ரசிகர்கள் குஷி

தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அஜித் தனது அடுத்த பட இயக்குனரை முடிவு செய்வதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு இயக்குனர்கள் கூறிய கதை அவருக்கு பிடித்துவிட்டதால் அந்த கதைகளை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த இரண்டு
 

இன்னும் 15 நாட்களில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்: ரசிகர்கள் குஷி

தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அஜித் தனது அடுத்த பட இயக்குனரை முடிவு செய்வதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் அதில் இரண்டு இயக்குனர்கள் கூறிய கதை அவருக்கு பிடித்துவிட்டதால் அந்த கதைகளை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த இரண்டு இயக்குனர்களில் ஒருவரை அஜித் விரைவில் தேர்வு செய்து இது குறித்த தகவலை அவர் தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்வார் என்று கூறப்படுகிறது

எனவே அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் இன்னும் 15 நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கல் பட்டியலில் விஷ்ணுவர்தன், லோகேஷ் கனகராஜ், வெங்கட்பிரபு, கெளதம் மேனன் ஆகியோர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விஷ்ணுவர்தனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

From around the web