கொடூர வில்லன்களை நகைச்சுவைக்கு மாற்றிய சினிமா

மன்சூரலிகான் , ஒரு காலத்தில் கேப்டன் பிரபாகரன் வந்த சமயத்தில் இவரது வில்லத்தனம் பரவலாக பேசப்பட்டது. உண்மையிலேயே மன்சூர் இப்படித்தான் இருப்பாரோ என்ற அளவு அவரது கேரக்டரை பலரும் பயத்துடன் ரசித்தனர். வீரபத்திரன் என்ற காட்டில் மரம் கடத்தும் கொள்ளையனாக கொடூரமாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து மன்சூருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. 90களுக்கு பிறகு இவர்தான் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார். சில வருடங்கள் கழித்து சொந்த படம் உட்பட
 

மன்சூரலிகான் , ஒரு காலத்தில் கேப்டன் பிரபாகரன் வந்த சமயத்தில் இவரது வில்லத்தனம் பரவலாக பேசப்பட்டது. உண்மையிலேயே மன்சூர் இப்படித்தான் இருப்பாரோ என்ற அளவு அவரது கேரக்டரை பலரும் பயத்துடன் ரசித்தனர்.

கொடூர வில்லன்களை நகைச்சுவைக்கு மாற்றிய சினிமா

வீரபத்திரன் என்ற காட்டில் மரம் கடத்தும் கொள்ளையனாக கொடூரமாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து மன்சூருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது.

90களுக்கு பிறகு இவர்தான் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார். சில வருடங்கள் கழித்து சொந்த படம் உட்பட பல படங்கள் எடுத்து கையை சுட்டுக்கொண்டார்.

கடந்த சில வருடங்களாக இவர் காமெடி வில்லனாக, காமெடியனாகவும் பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதே போல் நான் கடவுள் படத்தில் பிள்ளைகளை கடத்தி பிச்சையெடுக்க வைக்கும் டெரர் வில்லனாக அறிமுகமான நான் கடவுள் ராஜேந்திரன் அவரா இவர் என சொல்ல வைக்கும் அளவு முழு காமெடியனாக மாற்றி இதுவரை எந்த காமெடியனுக்கும் இல்லாத வகையில் பல கெட் அப்களை கொடுத்து விட்டனர் சினிமாக்காரர்கள். இவரை வரலாறு காணாத அளவு காமெடியனாக்கி விட்டனர். இனிமேல் இவரே நினைத்தாலும் இவருக்கு வில்லத்தனம் வராது.

இது போள் 90களுக்கு முன்பிருந்தே நடித்து வரும் வில்லன் ஆனந்தராஜும் இதே போன்ற பார்முலாவில் நடித்து வருகிறார். திரைப்படங்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என டெரர் வில்லனாக மிரட்டி இருப்பார் இவர். சில வருடங்கள் கழித்து கவர்மெண்ட் மாப்பிள்ளை, கிழக்கு வெளுத்தாச்சு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார்.

இவர் நடித்த புலன் விசாரணை திரைப்படத்தில் பலரை கொன்று சுவற்றில் புதைக்கும் மோசமான வில்லனாக நடித்திருப்பார்.

பாட்ஷாவில் ஆட்டோ, ஓம்னிக்களில் வந்து இந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்படிப்பட்ட வில்லனான இவரை தற்போது காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

தற்போது வந்துள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் கூட காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளார் ஆனந்தராஜ்.

From around the web