மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாப பலி

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டாரா என்ற மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவில் தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் சென்றதாகவும் தெரிகிறது 

hospital fire1

இருப்பினும் இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 

பொது மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் தீ விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது என்பது குறிப்பிட தக்கது

From around the web