தமிழக ரசிகர்களை குறி வைக்கும் தெலுங்கு நாயகர்கள்

தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உள்பட பல இளையதலைமுறை நடிகர்களுக்கு பக்கத்து மாநிலங்களில் நல்ல மதிப்பு உள்ளது. குறிப்பாக சூர்யாவுக்கு தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர்களின் பார்வையும் தமிழ் ரசிகர்கள் மீது விழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு, ராம்சரணின் ரங்குஸ்தலம் ஆகிய படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. அதேபோல் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள
 

தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உள்பட பல இளையதலைமுறை நடிகர்களுக்கு பக்கத்து மாநிலங்களில் நல்ல மதிப்பு உள்ளது. குறிப்பாக சூர்யாவுக்கு தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர்களின் பார்வையும் தமிழ் ரசிகர்கள் மீது விழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு, ராம்சரணின் ரங்குஸ்தலம் ஆகிய படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. அதேபோல் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள அல்லு அர்ஜூன் நடித்த ‘என் பெயர் சூர்யா’ படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக தமிழிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மகேஷ்பாபு, ஜூனியர் என்.டிஆர், ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் ஆகியோரகளின் பார்வை தமிழை நோக்கியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web