டெலிகாலர் கொடுத்த சவுக்கடி: புரியவில்லை என நடித்த ரம்யா!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் டெலிகாலர் ஒருவர் போட்டியாளர் ஒருவரிடம் கேள்வி கேட்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் டெலிகாலர் ஒருவர் ரம்யாவிட பேச வேண்டும் என்று கூறினார் 

அப்போது ரம்யாவின் விளையாட்டையும் அவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பதையும் பாசிட்டிவ் எண்ணத்துடன் இருப்பதையும் பாராட்டிவிட்டு அதன் பின்னர் நீங்கள் சில நேரங்களில் குழந்தை மருத்துவர்கள் போல் சில வேலைகள் செய்து விடுகிறீர்கள், அதேபோல் முகத்திற்கு எதிராக ஒரு குற்றத்தை சொல்லவில்லை. ஆரிபோல் நேருக்கு நேராக நின்று சொல்லாமல் பின்னாடி நின்று பேசுகிறீர்களே, ஏன்? என்று கேட்டார் 

ramya

அதற்கு ரம்யா தான் அவ்வாறு இருந்ததாக ஞாபகம் இல்லை என்றும் தான் நேருக்கு நேர் தான் கேட்டுக் கொண்டு வருவதாகவும் இனிமேல் நீங்கள் சொல்வதை நான் பரிசீலித்து செய்கிறேன் என்றும் கூறினார். இதனை அடுத்து ஷிவானியிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போது டெலிகாலர் ஏன் இப்படி கேட்டார் என்று எனக்கு புரியவில்லை என உச்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தினார் 

அப்போது ஷிவானி ஆரிபோல் நேரடியாக நீங்கள் பேசவில்லை என்று கூறியபோது ஆரி குறித்து பேசினாரா? என ஒன்றுமே தெரியாதது போல் ரம்யா கேட்டார். அதன் பிறகு அங்கு வந்த ரியோவும் ஆரிபோல நீங்கள் நேரடியாக பேசவில்லை என்று கேட்டதாக சொன்ன பிறகுதான் ரம்யா அதை ஒப்புக் கொண்டது போல் தெரிகிறது 

மொத்தத்தில் ஆரியை தவிர்க்கவே ரம்யா நினைக்கிறார் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. இதனை அடுத்து இன்று ரம்யா நாமினேஷனில் சிக்குவார் என்றம் ஆரி ரசிகர்களின் டார்கெட் ரம்யாவாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 

From around the web