"டெடி" ட்ரெய்லர் அவுட் டுடே!

மார்ச் 12 க்கு வெளியாக உள்ளது "டெடி" திரைப்படம்!
 
ஆர்யாவின் ட்விட்டர் பக்கம் கூறும் இன்ப தகவல்!

தனது நடிப்பாலும், தனது திறமையாலும், தனது அழகாலும் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் "நடிகர் ஆர்யா". நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகிய "பாஸ் என்ற பாஸ்கரன்" இவருக்கு நல்லதொரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக  "லேடி சூப்பர் ஸ்டார்"  நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் பிரபல காமெடி நட்சத்திரமான "நடிகர் சந்தானம்" நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் திரைப்படமாக உள்ளது.

teddy

மேலும் நடிகர் ஆர்யா ,நடிகர் விஷாலுடன் "அவன் இவன்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் "ராஜா ராணி". இத்திரைப்படத்தில் இவருடன் "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா ,நடிகர் ஜெய் மற்றும் நடிகை நஸ்ரியா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றது.

தற்போது நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டெடி".  இத்திரைப்படமானது மார்ச் மாதம் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஆர்யா திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை செய்துள்ளார். மேலும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் எனவும் அந்த போஸ்டர் கூறுகிறது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் ஆர்யா மற்றும் அவரது ரசிகர்கள்.

From around the web