வெளியானது பொன்மகள் வந்தாள் பாடலின் டீசர்!!

நடிகை ஜோதிகாவின் சினிமா வாழ்க்கையில் குஷி, மொழி, சந்திரமுகி, காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல் போன்ற பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்களாகும். நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார். திருமணத்திற்குப் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த அவர் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். ரீ எண்ட்ரியில் இவர்
 
வெளியானது பொன்மகள் வந்தாள் பாடலின் டீசர்!!

நடிகை ஜோதிகாவின் சினிமா வாழ்க்கையில் குஷி, மொழி, சந்திரமுகி, காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல் போன்ற பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்களாகும்.  நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார்.

திருமணத்திற்குப் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த அவர் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வெளியானது பொன்மகள் வந்தாள் பாடலின் டீசர்!!

ரீ எண்ட்ரியில் இவர் நடித்த அனைத்துப் படங்களுமே மாஸ் ஹிட் தான். மிகவும் செலக்டிவான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் பொன்மகள் வந்தாள் டிஜிட்டல் ஃபிளாட்பார்மில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார்.

பலரது எதிர்ப்பினையும் மீறி நாளை மறுநாள் (மே 29 ஆம் தேதி) அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடல் ஒன்றின் டீசர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

From around the web