போடு! நாளைக்கு டீஸரா...!

மகிழ்ச்சியை கொடுத்தார் எக்ஸ்பிரஷன் அழகி...!
 
மகிழ்ச்சியைக் கொடுத்த எக்ஸ்பிரஷன் அழகியின் ட்விட்டர் போஸ்ட்...,

எக்ஸ்பிரஷன்‌ குயின், தேவதை என்றெல்லாம் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகி இருந்த "கீதா கோவிந்தம்" திரைப்படம் இவருக்கு பலத்த ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தது. மேலும் இவரின் நடிப்பில் வெளியாகியிருந்த "டியர் காம்ரேட்" திரைப்படம் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றது.

Rashmika

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த இத்திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றது.நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இருந்த "அர்ஜுன் ரெட்டி" என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று "பிளாக்பஸ்டர் ஹிட்" அடித்தது

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் மகேஷ்பாபுவுடன் "சரிலேரு நீகேவரு" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். நடிகர் மகேஷ்பாபு தமிழில் "ஸ்பைடர்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின்  நடிப்பில் உருவாகியுள்ள படம்" டாப் டக்கர்". தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள போஸ்டர் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் அளித்துள்ளது.

From around the web