தப்பு பண்றியே சிங்காரம்: விஜய்சேதுபதி வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் கண்டனம்!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படும் 800 திரைப்படம் தான் இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக உள்ளன என்பதும் மற்ற பிரச்சனை அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு ஊடகங்கள் இந்த செய்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறாரா? இல்லையா? என்பது குறித்த தகவலை இன்னும் அவர் உறுதியாக சொல்லவில்லை. இதனால் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது 

இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் ’ஐஸ்வர்யா முருகன்’ என்ற படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த இந்த டீசரின் டுவீட்டுக்கு ஒருவர் கூட டீசர் குறித்த கமெண்ட்டுகளை பதிவு செய்யாமல் அவர் நடிக்கயிருக்கும் 800 திரைப்படம் குறித்து பதிவு செய்து வருகின்றனர் 

‘தப்பு பண்றியே சிங்காரம்’ என்று டுவிட்டர் பயனாளி ஒருவர் கமெண்ட் செய்து தயவு செய்து 800 படத்தில் நடிக்காதீர்கள் என்றும் இனத் துரோகியாக மாறாதீர்கள் என்று பதிவுகளை செய்துவருகின்றனர். விஜய்சேதுபதியே இதை எதிர்பார்க்கவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web