ஜார்ஜியாவில் உற்சாக வரவேற்பு கொடுத்த தமிழர்கள்: நெகிழ்ச்சி அடைந்த விஜய்!

 

தளபதி விஜய் நேற்று சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த உடன் அன்று இரவே ஜார்ஜியாவுக்கு ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றார் என்பதும் சென்னை விமான நிலையத்தில் அவர் உள்பட படக்குழுவினர் நின்றுகொண்டிருந்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று இரவு ’தளபதி 65’ படக்குழுவினர் ஜார்ஜியா சென்றடைந்தனர். அங்குள்ள விமான நிலையத்தில் இருந்து அவர்கள் காரில் சென்ற வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

அதே போல் ஜார்ஜியாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விஜய் உள்பட அனைவரும் உள்ளே சென்றபோது அங்கிருந்த தமிழர்கள் விஜய்க்கு வரவேற்பு கொடுத்தனர். இந்த நாட்டில் கூட நமக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்று எண்ணி அவர் நெகழ்ச்சி அடைந்ததாக தெரிகிறது 

vijay

மேலும் ’தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ஜார்ஜியாவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் நாயகி பூஜா ஹெக்டே ஜார்ஜியா செல்வார் என்றும் அவர் பட குழுவினருடன் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு மூன்று வாரங்கள் நடைபெறும் என்றும் அதன்பிறகு படக்குழுவினர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது

From around the web