விஜய் சேதுபதி படத்திற்கு திடீரென வலுக்கும் எதிர்ப்பு: காரணம் கிரிக்கெட் வீரரின் மனைவியா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே அவற்றில் ஒன்று பிரபல இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்த முத்தையா முரளிதரனின் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று ஏற்கனவே அவருக்கு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இந்த படம் வெளிவந்த பின்னர் இந்த படத்தில் தான் ஏன் நடித்தேன் என்பது குறித்து அனைவருக்கும் புரியும்
 

விஜய் சேதுபதி படத்திற்கு திடீரென வலுக்கும் எதிர்ப்பு: காரணம் கிரிக்கெட் வீரரின் மனைவியா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே அவற்றில் ஒன்று பிரபல இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்த முத்தையா முரளிதரனின் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று ஏற்கனவே அவருக்கு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இந்த படம் வெளிவந்த பின்னர் இந்த படத்தில் தான் ஏன் நடித்தேன் என்பது குறித்து அனைவருக்கும் புரியும் என்றும் தயவுசெய்து அதுவரை காத்திருங்கள் என்று விஜய் சேதுபதி விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்திற்கு 800 என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்க விருப்பதாகவும் சாம் சிஎஸ் இசையமைக்க இருப்பதாகவும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் ஐந்து அல்லது ஆறு மொழிகளில் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தை தயாரிப்பது முரளிதரனின் மனைவிதான் என்ற தகவல் வந்துள்ளது. சென்னையை சேர்ந்த முரளிதரனின் மனைவிதான் இந்த படத்தை தயாரிப்பது என்ற செய்தி கேள்விப்பட்டதும் மீண்டும் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்கள் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web