எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி!

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவிற்கு திரையுலகினர் அரசியல்வாதிகள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் எஸ்பிபி குறித்து டுவிட்ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு!

பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை இழந்து மிகுந்த துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

From around the web