தமிழ் நடிகை பாலியல் வன்கொடுமை: சென்னை வாலிபர் மீது வழக்கு!

தமிழ் நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை வாலிபர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப் படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் தன்னை காதலித்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும் இதன் காரணமாக அவருடன் தனிமையில் சில நாட்கள் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்
ஆனால் திருமண தேதி நெருங்கும் நிலையில் திடீரென தன்னை விட்டு அவர் சென்றுவிட்டார் என்றும் தன்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்ததோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் பத்து லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து தற்போது காவல்துறையினர் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து ராஜேஷின் வழக்கறிஞர் கூறியபோது, சம்பந்தப்பட்ட நடிகை பலருடன் தொடர்பு வைத்திருந்ததால்தான் ராஜேஷ் தனது திருமணத்தை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.