போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் நடிகை கைது: பரபரப்பு தகவல்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று காலை ராகினி திரிவேதி வீட்டில் திடீரென போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 

கர்நாடக குற்றப்பிரிவு போலீஸ் பெங்களூரில் நடிகை ராகினி திவேதி கைது செய்துள்ளதாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில நாட்களாகவே கன்னட திரையுலகில் போதைப் பொருட்கள் அதிகரிப்பதாகும் இதுகுறித்து தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் பல திரையுலக பிரமுகர்கள் போதைப் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழ் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web