தமன்னாவின் ஆசையை நிறைவேற்றுவாரா ஸ்ரீதேவியின் கணவர்?

மேரிகோம், தோனி, சச்சின் மற்றும் சமீபத்தில் வெளிவந்த சாவித்திரி ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து சமீபத்தில் துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் விரைவில் திரைப்படமாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்க சரியான நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் நடிகை தமன்னா இந்த படத்தில் ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்க தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்
 

தமன்னாவின் ஆசையை நிறைவேற்றுவாரா ஸ்ரீதேவியின் கணவர்?மேரிகோம், தோனி, சச்சின் மற்றும் சமீபத்தில் வெளிவந்த சாவித்திரி ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து சமீபத்தில் துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் விரைவில் திரைப்படமாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்க சரியான நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் நடிகை தமன்னா இந்த படத்தில் ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்க தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளத்தை கூட குறைத்து கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

தமன்னாவின் ஆசையை நிறைவேற்றுவாரா ஸ்ரீதேவியின் கணவர்?இதுகுறித்து தமன்னா பேட்டி ஒன்றில் கூறியதாவது: ‘சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. நானும் அதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படமொன்றில் நடிக்க ஆசைபடுகிறேன். நடிகை ஸ்ரீதேவி, சானியா மிர்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது” என்று கூறினார். தமன்னாவின் ஆசையை ஸ்ரீதேவியின் கணவர் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web