தமன்னாவை தலைகீழாக நிற்க வைத்தவர்: அதிர்ச்சி வீடியோ

கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாத வகையில் உள்ளன. பல நடிகைகள் வேடிக்கையான வினோதமான வீடியோக்களையும் வெளியிடுகிறோம் என்று கூறி மொக்கையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார்கள் ஒரு சில நடிகைகள் மட்டும் உருப்படியான உபயோகமுள்ள வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகை தமன்னா சற்று முன்னர் தலைகீழாக நிற்க முயற்சிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அவர் ஒரு சிறந்த
 

தமன்னாவை தலைகீழாக நிற்க வைத்தவர்: அதிர்ச்சி வீடியோ

கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாத வகையில் உள்ளன. பல நடிகைகள் வேடிக்கையான வினோதமான வீடியோக்களையும் வெளியிடுகிறோம் என்று கூறி மொக்கையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார்கள் ஒரு சில நடிகைகள் மட்டும் உருப்படியான உபயோகமுள்ள வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை தமன்னா சற்று முன்னர் தலைகீழாக நிற்க முயற்சிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளரின் உதவியுடன் தலையை தரையில் வைத்து, காலை தானாகவே மேலே தூக்குகிறார். எந்தவித உதவியும் இன்றி அவர் தலைகீழாக நிற்கும் அந்த வீடியோ பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த வீடியோ குறித்து அவர் கூறியபோது ’ஒரு சில தோல்விகள் மற்றும் வீழ்ச்சிகளுக்கு அப்புறமே வெற்றி கிடைக்கும் என்பது இதன் மூலம் தெரிந்து கொண்டேன். தலைகீழா நிற்பதற்கு முன் நானும் பலமுறை விழுந்து விட்டேன். ஆனாலும் விடாமுயற்சியால் ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் தயவு செய்து இதனை யாரும் பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்ய வேண்டாம் என்று தமன்னா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

From around the web