மிகத்திறமையான நடிகர்: வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்த முன்னணி ஹீரோ

பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக இன்று மரணமடைந்தது சின்னத்திரை நட்சத்திரங்களை மட்டுமின்றி பெரிய திரை நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

 

பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக இன்று மரணமடைந்தது சின்னத்திரை நட்சத்திரங்களை மட்டுமின்றி பெரிய திரை நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

இந்த நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு சின்னத்திரை நடிகைகள் ஏராளமானோர் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார் அதேபோல் பெரிய திரை நடிகர்களும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

விவேக், பிரசன்னா, சாந்தனு, சதீஷ், ரியோ ராஜ், ஆர்கே சுரேஷ், பால சரவணன் உள்ளிட்ட நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி ரகுராம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகளும் தங்களுடைய சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர் 

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேல் பாலாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: சிறந்த நடிகர்களில் ஒருவரான வடிவேல் பாலாஜியின் எதிர்பாராத மறைவு என்னை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கியது என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவருடைய குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார் 


 

From around the web