தனுஷ் படத்தில் தாஜ்மஹால் காட்சி: தூள் கிளப்பும் அக்சயகுமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் சமீபத்தில் Atrangi Re என்ற பாலிவுட் படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அக்ஷய் குமாரும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் அக்ஷய் குமார் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். தாஜ்மஹாலின் முன் சூப்பரான காஸ்டியூமில் மென்மையான நடனமாடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளன இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் ஒரே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் தமிழில் டப் செய்து வெளியிடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த இரண்டு பாலிவுட் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது