முருகக்கடவுளுடன் சிம்புவை ஒப்பிட்ட டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் இன்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பெயர்ப்பலகையை பத்திரிகையாளர் முன் திறந்து வைத்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் முன் பேசிய டி.ராஜேந்தர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். பின்னர் தனது மகன் சிம்பு குறித்து அவர் பேசியபோது கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர் எனது மகன் சிம்பு என்று குறிப்பிட்டார். டி.ராஜேந்தரின் இந்த பேச்சு மீம்ஸ் கிரியேட்டருக்கு கிடைத்த அல்வா போல் இருந்தது. ‘கடவுள் இல்லை என்று சொன்ன
 

டி.ராஜேந்தர் இன்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பெயர்ப்பலகையை பத்திரிகையாளர் முன் திறந்து வைத்தார்.

பின்னர் பத்திரிகையாளர்கள் முன் பேசிய டி.ராஜேந்தர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். பின்னர் தனது மகன் சிம்பு குறித்து அவர் பேசியபோது கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர் எனது மகன் சிம்பு என்று குறிப்பிட்டார்.

டி.ராஜேந்தரின் இந்த பேச்சு மீம்ஸ் கிரியேட்டருக்கு கிடைத்த அல்வா போல் இருந்தது. ‘கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் கூட இவ்வளவு அவமானப்படுத்தியதில்லை! முருகர் பேசிய ஆடியோ ரெக்கார்டிங்கை நாளை டிஆர் ரிலீஸ் பண்ணுவார் என்று நம்புகிறேன் என்று ஒருவரும், பீப் பாட்டுக் கூட முருகர் மாதிரிதானா?’ என்று ஒருவரும் டிஆர் பேச்சுக்கு கமெண்ட் அளித்துள்ளனர்.

From around the web