வீட்டைவிட்டு வெளியே வருமாறு வேண்டுகோள் விடுத்த சில்வியா சாண்டி!

பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக போய்க்கொண்டிருகிறது. இந்த சீசன் ஆரம்பித்த 2 வது நாள் முதலே வீடு சண்டை, காதல், புறணி பேசுதல் என சிறப்பாக போய் வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சாண்டிக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிக்பாஸ் அனுப்பிய கேக்கை வெட்டி போட்டியாளர்கள் அனைவரும் சாண்டியின் பிறந்த நாளை கொண்டாடினர். சினிமாவில் நடன பயிற்சியாளாரக பணிபுரிந்தவர் சாண்டி. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் தனது நகைச்சுவை உணர்வால் சிரிக்க வைப்பதுடன் எப்போதும்
 

பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக போய்க்கொண்டிருகிறது. இந்த சீசன் ஆரம்பித்த 2 வது நாள் முதலே வீடு சண்டை, காதல், புறணி பேசுதல் என சிறப்பாக போய் வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சாண்டிக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிக்பாஸ் அனுப்பிய கேக்கை வெட்டி போட்டியாளர்கள் அனைவரும் சாண்டியின் பிறந்த நாளை கொண்டாடினர்.

சினிமாவில் நடன பயிற்சியாளாரக பணிபுரிந்தவர் சாண்டி. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் தனது நகைச்சுவை உணர்வால் சிரிக்க வைப்பதுடன் எப்போதும் கலகலப்பாக இருக்கிறார். இதுவரை யாருடனும் சண்டை, சச்சரவு இல்லாமல் நிதானமாக இருப்பவர்.

வீட்டைவிட்டு வெளியே வருமாறு வேண்டுகோள் விடுத்த சில்வியா சாண்டி!

இவரது பிறந்தநாள் நேற்று ஜூலை 5. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென சாண்டிக்கு வாழ்த்து கூறி அவரது குழந்தையின் அழுகுரல் ரிங் டோன் ஒலிபரப்பப்பட்டது. இதையடுத்து அவரது குழந்தை சாண்டியின் புகைப்படத்தை கொஞ்சும் ஒரு வீடியோ ஒன்றும் அங்குள்ள டீவியில் ஒளிபரப்பட்டது. 

இதனைப் பார்த்து சாண்டி குழந்தையை நினைத்து கதறி அழுதார். இந்த வீடியோவைப் பார்த்து லாஸ்லியாவும் கதறி அழுதார். பிக்பாஸ் அனுப்பிய கேக்கை வெட்டி அனைவரும் சாண்டியின் பிறந்த நாளை கொண்டாடினர்.

இதுகுறித்து சாண்டியின் மனைவி பேசுகையில், “வெளியில் எப்போதும் எப்படி இருப்பாயோ அதே போல் தான் உள்ளேயும் இருக்கிறாய். உனக்கு பிரச்சனை என்றால் ஓடி வந்துவிடு. நூறு நாள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை” என்று கூறியுள்ளார். 

From around the web