தியேட்டருக்கு மாறுகிறதா சூர்யாவின் சூரரைப்போற்று? பரபரப்பு தகவல் 

 

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கிய சூரரைப்போற்று திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் திறக்க பட்டாலும் அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் திரையரங்குக்கு திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 

அவ்வாறு திரையரங்குகள் திறப்பது உறுதி செய்யப்பட்டால் சூரரைப்போற்று திரைப்படம் தியேட்டரில் நேரடியாக ரிலீஸாகும் என்றும் ஓடிடி ரிலீஸ் குறித்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

ஆனால் அதே நேரத்தில் ஓடிடி உரிமையாளர்கள் நினைத்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்றும் சூர்யாவின் தரப்பிலிருந்து ரத்து செய்வது கடினம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய சூர்யா உள்பட படக்குழுவினர் தீவிர முயற்சிகள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web