கார்த்தியின் கையில் சுழலும் சாட்டை: ‘சுல்தான்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

 

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் ‘சுல்தான்’. இடையில் ஒரு சில பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தாலும் அதன் பின் விறுவிறுப்பாக படப்பிடிப்பு துவங்கி தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

வரும் பொங்கல் தினத்தில் ‘சுல்தான்’ திரைப்படத்தை வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். கார்த்திக்கின் கையில் சுழலும் சாட்டை இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. கார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதும், இதுவே இவரது முதல் தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

விவேக் மெர்வின் இசையில் சத்யன்சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஓட்டிகள் வெளிவருமா அல்லது திரையரங்குகளில் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web