90ஸ் கிட்ஸ் வாழ்க்கையே வேற… சுவாதி ரெட்டி இன்ஸ்டாவில் பதிவு!!

தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையான சுவாதி ரெட்டி மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையினைத் துவக்கிய நிலையில், சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் சினிமாவில் கால் பதித்தார். இவர் 2018 ஆம் ஆண்டு மலையாளப் பைலட் விகாஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். இவர் இன்ஸ்டாகிராமில் 90 ஸ் கிட்ஸ் வாழ்க்கை குறித்து தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “@SwathiReddyOffl” என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் ஐடி போலியானது. நான் ட்விட்டர், பேஸ்புக் பயன்படுத்துவது
 
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையே வேற… சுவாதி ரெட்டி இன்ஸ்டாவில் பதிவு!!

தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையான சுவாதி ரெட்டி  மா  தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையினைத் துவக்கிய நிலையில், சுப்ரமணியபுரம்  திரைப்படத்தின் சினிமாவில் கால் பதித்தார்.

இவர் 2018 ஆம் ஆண்டு மலையாளப் பைலட் விகாஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார்.

90ஸ் கிட்ஸ் வாழ்க்கையே வேற… சுவாதி ரெட்டி இன்ஸ்டாவில் பதிவு!!

இவர் இன்ஸ்டாகிராமில் 90 ஸ் கிட்ஸ் வாழ்க்கை குறித்து தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “@SwathiReddyOffl” என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் ஐடி போலியானது. நான் ட்விட்டர், பேஸ்புக் பயன்படுத்துவது கிடையாது. அதனால் அதுகுறித்து நீக்கக்கோரி உள்ளேன்.

90 களின் வாழ்க்கை அற்புதமானவையாக இருந்தன. இதுபோல் போலி கணக்குகள், போலியான உறவுகள் என எதுவும் இருக்கவில்லை. தொழில்நுட்பத்தில் பின் தங்கினாலும் இப்போதைய ஸ்மார்ட்போனை விட அப்போதைய லேண்ட் லைன் அனைவரையும் ஒன்றாக இணைத்தது.

ஐஸ் கிரீம், முட்டை பப்ஸ் இருந்தால் நண்பர்களுடன் பொழுதுபோக்கலாம், மிக எளிமையான நிகழ்ச்சிகளோடு அனைரையும் ஒன்றாக பொழுதுபோக்க வைக்கும்  தூர்தர்ஷன் மட்டுமே போதுமானதாக இருந்தது. என்னை 90 களின் காலத்திற்கு கொண்டு சென்று விட்டுவிடுங்கள், நான் அற்புதமான வாழ்க்கையினை வாழ்ந்துவிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web