ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி கேட்ட சுசீலா: விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பு

 
suseela

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் தயாரித்து இசையமைத்த திரைப்படம் ’99 சாங்ஸ்’. இந்த படம் வெளியாகி ஒரு சில நாட்களில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தது தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஏஆர் ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ படத்தை பார்த்த பழம்பெரும் பின்னணி பாடகி சுசீலா அவர்கள் ஏஆர் ரஹ்மானை பாராட்டியதாகவும் படம் மிகவும் அருமையாக இருந்தது என்று கூறியதாகவும் தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமும் இதே போன்று அமைக்கப்பட வேண்டும் என்று தனது ஆசை என்றும் அதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும் ஏஆர் ரஹ்மான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஏழு தலைமுறைகளாக பாடல்கள் பாடி வரும் சுசீலா அவர்களின் பாராட்டு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் விரைவில் அவரது ஆசையை நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன் என்றும் கூறியுள்ளார். எனவே பி சுசிலாவின் வாழ்க்கை வரலாறு குறித்த அறிவிப்பை விரைவில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web