சுஷாந்த் காதலி நடிகை ரியா கைது: எந்த வழக்கில் தெரியுமா?

சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என சுஷாந்த் தந்தை புகார் அளித்துள்ள நிலையில் திடீரென நடிகை ரியா போதைப்பொருள் விவகார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என சுஷாந்த் தந்தை புகார் அளித்துள்ள நிலையில் திடீரென நடிகை ரியா போதைப்பொருள் விவகார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் விவகாரத்தில் ஏற்கனவே நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் சோவிக் மற்றும் சுஷாந்த் சிங் மேனேஜர் சாமுவேல் மிராண்டா உள்பட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது கூறிய புகார் குறித்து பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இதுகுறித்து தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோர்களை கைது செய்த தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார், இன்று ரியாவையும் கைது செய்தனர். இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web