சுஷாந்த்சிங்கின் கடைசி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில். அவரது மறைவு இன்னும் பாலிவுட் திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. சுஷாந்த்சிங் நடித்த வெளியான கடைசி திரைப்படமான ’டிரைவ்’ நெட்ப்ளிக்ஸ்-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’Dil Bechara’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது டிரைவ் போலவே ’Dil Bechara’ என்ற இந்த படத்தையும்
 

சுஷாந்த்சிங்கின் கடைசி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில். அவரது மறைவு இன்னும் பாலிவுட் திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. சுஷாந்த்சிங் நடித்த வெளியான கடைசி திரைப்படமான ’டிரைவ்’ நெட்ப்ளிக்ஸ்-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’Dil Bechara’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது

டிரைவ் போலவே ’Dil Bechara’ என்ற இந்த படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இந்த படத்தின் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சுஷாந்த்சிங் ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுஷாந்தின் படத்தை தாங்கள் பெரிய திரையில் பார்க்க விரும்புவதாகவும், இதனால் கொரோனா நிலைமை சரியானவுடன் இந்த படத்தை திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ரசிகர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ’Dil Bechara’ திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி டிஸ்னிஹாட்ஸ்டாரில் வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுஷாந்தின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், சுஷாந்தின் கடைசி திரைப்படத்தை விரைவில் பார்க்க இருக்கும் சந்தோஷத்தில் உள்ளனர்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் ஜோடியாக சஞ்சனா சிங் நடித்துள்ளார். முகேஷ் சாப்ரா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

From around the web