சுஷாந்த்சிங் காதலி ரியா திடீர் தலைமறைவு: என்ன காரணம்?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த தற்கொலைக்கு காரணமானவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் மும்பை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் சுஷாந்தின் காதலி ரியா என்ற நடிகையை சமீபத்தில் காவல்துறையினர் பலமணி நேரம் விசாரணை செய்த நிலையில் தற்போது அவர் திடீரென தலைமறைவாகி உள்ளார் சமீபத்தில் சுஷாந்தின் தந்தை காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்தார். காதலி
 

சுஷாந்த்சிங் காதலி ரியா திடீர் தலைமறைவு: என்ன காரணம்?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த தற்கொலைக்கு காரணமானவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் மும்பை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சுஷாந்தின் காதலி ரியா என்ற நடிகையை சமீபத்தில் காவல்துறையினர் பலமணி நேரம் விசாரணை செய்த நிலையில் தற்போது அவர் திடீரென தலைமறைவாகி உள்ளார்

சமீபத்தில் சுஷாந்தின் தந்தை காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்தார். காதலி ரியா தான் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும் பொருளாதார ரீதியில் சுஷாந்தை அவர் ஏமாற்றி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்

இந்த புகாரின் அடிப்படையில் ரியா மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பதிவு செய்த சில மணி நேரங்களில் ரியா தனது மும்பை வீட்டில் இருந்து தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது

ரியா திடீரென தலைமறைவாகி உள்ளதால் அவர் சுஷாந்த் தற்கொலைக்கு காரணமாகவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்

From around the web