சூர்யாவின் அடுத்த படம் ’வாடிவாசல்’ இல்லை: திடீர் மாற்றம்!

 

சூர்யாவின் அடுத்த படம் என அனைவரும் எதிர்பார்த்திருந்த ’அருவா’ திரைப்படம் டிராப் ஆகி விட்டதை அடுத்து அவரது அடுத்த படம் வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ தான் என்று கூறப்பட்டது 

இதனை அடுத்து வெற்றிமாறன் ’வாடிவாசல்’ படத்திற்கான பணியை தொடங்கிவிட்டதாகவும் அந்த படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷின் இசை அமைக்கும்போது பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம்தான் அவரது அடுத்த படம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் ’வாடிவாசல்’  திரைப்படம் சில மாதங்கள் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது

தற்போது அடுத்த மாதம் சன் பிக்சர்ஸ், சூர்யா, பாண்டிராஜ் இணையும் படம் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும், கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் நடிகையும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

From around the web