ஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி: பரபரப்பு தகவல் 

 

சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் தற்போது திரைப்படங்கள் இயக்குவதற்கு பதிலாக ஆந்தாலஜி படங்களை இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே

ஏற்கனவே ஐந்து முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில் தற்போது 9 முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று தயாராகி வருவதாகவும் விரைவில் இந்த ஆந்தாலஜி திரைப்படம் ஓடிடியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 

’நவரசா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் நடிக்கும் நடிகர்கள் இயக்குனர்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

இயக்குனர்கள்: கேவி ஆனந்த், கௌதம் மேனன், விஜய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன் ராம், கார்த்திக் நரேன், ரதீந்திரன் பிரசாத் அரவிந்தசாமி

நடிகர்கள்: சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ்ராஜ், ரேவதி, நித்யாமேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா

From around the web