சாரம்சம் கூட தெரியாமல் பேசுகிறார் சூர்யா: ராதாரவி

 

சமீபத்தில் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமாக வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் முதல் நீதிமன்றம் வரை இந்த அறிக்கை பேசப்பட்டது என்பதும் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சிலரும், நீதிமன்ற நடவடிக்கை தேவை இல்லை என்று ஒரு சிலரும் கூறினார்கள் என்பதும் இறுதியில் தலைமை நீதிமன்ற அமர்வு சூர்யா மீது நடவடிக்கை தேவை இல்லை என்ற முடிவை எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை 

இந்த நிலையில் சூர்யா வெளியிட்ட அறிக்கை ஒரு வாரம் ஆகியும் இன்னும் இந்த சர்ச்சை நீங்கவில்லை. குறிப்பாக பாஜகவினர் இதுகுறித்து கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிரபல குணசித்திர நடிகர் ராதாரவி சூர்யாவின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நீட்தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சாரம்சம் கூட தெரியாமல் நடிகர் சூர்யா பேசுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முழு விவரங்கள் தெரியாமல் பேசுவபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்ட காரணத்தினால் நடிகர் சங்கம் உருப்படாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web