காப்பான் முடிந்ததும் யானையாக மாறும் சூர்யா

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் கடந்த வருடத்தில் வெளியானது. இது போதிய வரவேற்பை பெறவில்லை.அதே போல் விக்ரம் இயக்கிய சாமி 2 திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருவருக்குமே இப்போது நல்லதொரு வெற்றிப்படம் தேவைப்படுகிறது. முதன் முறையாக ஹரி ஏவிஎம் நிறுவனத்துடன் இணைகிறார். சூர்யா மூன்றாவது முறையாக ஏவிஎம்முடன் இணைகிறார். இதற்கு முன் அயன், பேரழகன், படங்களை ஏவிஎம் நிறுவனம் சூர்யாவை வைத்து தயாரித்துள்ளது. தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் “என்.ஜி.கே” படத்தில் கே.வி.ஆனந்த்
 

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் கடந்த வருடத்தில் வெளியானது. இது போதிய வரவேற்பை பெறவில்லை.அதே போல் விக்ரம் இயக்கிய சாமி 2 திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருவருக்குமே இப்போது நல்லதொரு வெற்றிப்படம் தேவைப்படுகிறது.

காப்பான் முடிந்ததும் யானையாக மாறும் சூர்யா

முதன் முறையாக ஹரி ஏவிஎம் நிறுவனத்துடன் இணைகிறார். சூர்யா மூன்றாவது முறையாக ஏவிஎம்முடன் இணைகிறார்.

இதற்கு முன் அயன், பேரழகன், படங்களை ஏவிஎம் நிறுவனம் சூர்யாவை வைத்து தயாரித்துள்ளது.

தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் “என்.ஜி.கே” படத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” படத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில், கே.வி ஆனந்தின் “காப்பான்” திரைப்படம் முடிவடைந்ததும், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது


ஹரியின் படங்கள் பட பட தட தடவென அதிரடியாக நகர்வதால் ரசிகர்களிடம் ஹரியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது சூர்யா என்று இல்லாமல் ஹரி யாரை வைத்து இயக்கினாலும் ஹரியின் ஆக்சன் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

முதன் முறையாக மிகப்பெரும் நிறுவனமான ஏவிஎம்முடன் ஹரி இணைவதால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது


From around the web