பொதுமக்களுடன் விமானத்தில் பயணம் செய்த சூர்யா ஜோதிகா 

டிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகா இருவரும் பொது மக்களுடன் விமானத்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
 

நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை முக்கிய நட்சத்திரங்கள் உடன் அண்மையில் நடந்தது, கொரோனா பாதிப்பில் இருந்து சமீபத்தில் மீண்டுள்ள சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார், அதுமட்டுமின்றி சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகா இருவரும் பொது மக்களுடன் விமானத்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

From around the web