சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து ஓடிடியில் வரும் ஜெயம்ரவி திரைப்படம்!

 

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில மாஸ் நடிகர்களின் படங்கள் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’பூமி’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

ஜெயம் ரவியின் 25வது படமான இந்தப் படத்தை லட்சுமணன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய ஜெயம் ரவியின் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது 

நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web