சூர்யாவுடன் இணைந்து புரட்சியை தொடரும் ரஞ்சித்

இயக்குனர் ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களை இயக்கியதோடு, இந்த இரண்டு படங்களிலும் தனது புரட்சி கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டார். இந்த நிலையில் ரஜினியை அடுத்து சூர்யா மூலம் தனது புரட்சியை தொடரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது சூர்யா
 

சூர்யாவுடன் இணைந்து புரட்சியை தொடரும் ரஞ்சித்

இயக்குனர் ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களை இயக்கியதோடு, இந்த இரண்டு படங்களிலும் தனது புரட்சி கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டார்.

இந்த நிலையில் ரஜினியை அடுத்து சூர்யா மூலம் தனது புரட்சியை தொடரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் முடிந்துவுடன் அவர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web