பிறந்த குழந்தைக்கு சூரரைப்போற்று சூர்யா பெயர் வைத்த ரசிகர்!

 

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 

இந்த படம் சூர்யா, அபர்ணாவின் நடிப்பு, சுதாவின் திரைக்கதை மற்றும் இயக்கம், ஜிவி பிரகாஷின் இசை உள்பட அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கியதாகவும் இதனால் இந்த படத்தை ஒளிபரப்பிய அமேசான் ப்ரைம்க்கு வசூல் குவிந்தது என்றும் கூறப்படுகிறது 

surya fan baby

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு மாறா என பெயர் வைத்துள்ளார். சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா கேரக்டரின் பெயர் நெடுமாறன் ராஜாங்கம் என்றாலும் அவரை எல்லோரும் மாறா என்றுதான் அழைத்து வந்தனர். அந்த வகையில் தனது குழந்தைக்கு மாறா என்று பெயர் வைத்துள்ளார் அந்த ரசிகர்

இது குறித்து ட்வீட் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் இதனையடுத்து அந்த குழந்தைக்கு சூர்யாவின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருவதோடு அந்த டுவீட்டும் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web